Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்க ஜனாதிபதி உடனான சந்திப்பு வெற்றி - உக்ரைன் ஜனாதிபதி


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். 

போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நேற்று (18) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களுக்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த அறிக்கையை வெளியிட்டார். 

ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறினார். 

அமெரிக்க ஜனாதிபதிக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த சந்திப்பில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர், பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்சு ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழு கலந்து கொண்டது. 

குறித்த கலந்துரையாடலின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

adaderanatamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments