Ticker

6/recent/ticker-posts

Ad Code



நாட்டில் மீண்டும் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்


நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

 (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

எலிக்காய்ச்சலானது, சேற்று நீரினால் பெரும்பாலும் ஏற்படுவதாக அவர் கூறினார். 

பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால், சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக பெரும்பாலும் வயல் நிலங்களுக்கு செல்வதால், எலிக்காய்ச்சல் நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

காய்ச்சல் ஏற்பட்டு சுமார் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க முடியும் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார். 

கண்கள், சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், வயிற்று வலி மற்றும் சிறுநீர் கடும் மஞ்சள் நிறமாக வௌியேறுதல் என்பன எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். 

இந்த எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அறிவறுத்தியுள்ளார். 

அத்துடன் இந்த நோய் நிலைமை, சிறுநீரக தொற்றுக்கும் வழிவகுக்கும் என்றும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

adaderanatamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments