Ticker

6/recent/ticker-posts

ரணில் வழக்கு: வீதியை மறித்தவர்களை கைது செய்ய உத்தரவு


பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் கூடியிருந்த நபர்களின் அடையாளத்தை வெளிபடுத்தி அவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர   குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.

வழக்கு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கான தனிப்பட்ட பயணத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​ஒன்றரை நாட்களுக்கு 1.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவழித்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் பலரும் கூடியிருந்தனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைகள் தடைபடும் வகையில் பல்வேறு நபர்களை ஒன்று திரட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டி, வழக்குத் தொடுனர் தரப்பில் ஆஜரான மேலதிகா சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

tamilmirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments