
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை அக்டோபர் 17 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் , புதன்கிழமை (27) உத்தரவிட்டது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை பரிசீலித்தது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்தக்கு கொண்டுவந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிஷ்க விதாரண, வழக்கை பரிசீலிப்பதற்கான விரைவான திகதியைக் கோரினார்.
அதன்படி, பிரதிவாதிகளுக்கு மேலும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரரின் வழக்கறிஞர்களுக்கு அமர்வு அறிவுறுத்தியது.
மனுவை ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனுவில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உட்பட 31 நபர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments