Ticker

6/recent/ticker-posts

உக்ரேன் போர் முடிவுக்கு வருமா?


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் கலந்துகொண்ட உச்சநிலைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

அதற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டம் நடந்தது. அது சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது.

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துத் திரு டிரம்ப் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இருவரும் 3 மணிநேரத்திற்கு மேல் தங்களது ஆலோசகர்களுடன் பேசியிருக்கின்றனர்.

உக்ரேனுடன் தொடரும் போர் குறித்து ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாகத் திரு புட்டின் கோடிகாட்டினார். ஒப்பந்தத்தை எட்டும்வரை எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்றார் திரு டிரம்ப்.

இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாகத் திரு டிரம்ப் சொன்னார். சில விவகாரங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உச்சநிலை மாநாடு குறித்துத் தாம் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் பேசவிருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார்.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments