
அமெரிக்காவுக்குக் கனவுகளோடு கிளம்புற வெளிநாட்டு மாணவர்கள், மீடியா ஆட்கள், ஆராய்ச்சி பண்றவங்க.. எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க!
ஏன்னா, இதுவரைக்கும் இருந்த Duration of Statusங்கிற சூப்பரான சிஸ்டத்துக்கு, அமெரிக்க அரசாங்கம் இப்போ கேட் போட்டுட்டாங்க.
பல வருஷமா இருந்த இந்த ரூல்ஸை மாத்தி, புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கு DHS (உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை).
காலவரையற்ற விசா? இனி கனவுதான்!
இதுவரைக்கும் உங்க படிப்பு முடியற வரைக்கும் அல்லது வேலையில இருக்கிற வரைக்கும் அமெரிக்கால விசா காலம் தானா நீட்டிச்சிட்டே இருக்கும்.
அதாவது, உங்களுக்கு ஒரு expiry date கிடையாது. ஆனா, இனிமே அப்படி இல்லை! சட்டவிரோதமா தங்குறவங்களை கண்டுபிடிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் இந்த பெரிய மாற்றம் தேவைனு DHS சொல்லியிருக்கு.
சரி, என்னதான் நடக்குது? ஷாக் ஆகாம படிங்க!
விசாவுக்கு இனி காலக்கெடு!
F மற்றும் J விசாக்களுக்கு இனி அதிகபட்சமா நாலு வருஷம் மட்டும்தான் விசா கொடுப்பாங்களாம். இதுக்கு அப்புறம் நீங்க அங்கேயே இருக்கணும்னா, புதுசா Extension கேட்டு அப்ளை பண்ணனும்.
முடிஞ்சா ஓடு!
F-1 மாணவர்களுக்கு ஒரு பெரிய ட்விஸ்ட். படிப்பு முடிஞ்சா, 60 நாள் வரைக்கும் வேலை தேடவோ, வேற பிளான் போடவோ டைம் கிடைக்கும். இனிமே அந்த டைம் 30 நாள்தான்! முடிஞ்சா ஓடு, இல்லன்னா சிக்கல் தான்.
படிப்பை மாத்த முடியாது!
முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு கோர்ஸ்ல இருந்து இன்னொரு கோர்ஸுக்கு மாறணும்னா, அது இனிமே ரொம்ப ரொம்ப கஷ்டமாக்கப் போறாங்க. இது பல பேரோட பிளானைக் குழப்பிடும்.
மீடியா ஆட்களுக்கு ரெட் சிக்னல்: ஊடகவியலாளர்களுக்குன்னு விசா வச்சிருக்கிறவங்களுக்கு 240 நாள் மட்டும்தான் அமெரிக்கால இருக்க அனுமதி. அதுலயும் சீனாவைக் குறித்த சில விதிவிலக்குகள் இருக்கு.
ஏன் இந்த விஷயம் இப்போ டாபிக்?
இந்த முடிவு வெளிநாட்டு மாணவர்களை அதிர வச்சிருக்கு. 30 நாள்ல எப்படி வேலை தேடுறது? ஃபியூச்சர் என்ன ஆகும்?னு அவங்களுக்கு பெரிய கவலை. ஆனா, அரசாங்கம் இதை ஒரு சீர்திருத்தமா பார்க்குது. ஏன்னா, பல விசாக்கள் காலாவதியான பிறகும் அங்கேயே இருக்கிறவங்களால ஏற்பட்ட பிரச்னைகளைத் தடுக்க இந்த மாற்றம் உதவும்னு சொல்லியிருக்காங்க.
இந்த ரூல்ஸ் இன்னும் அப்ரூவ் ஆகலை. பொதுமக்களோட கருத்துக்காக வெச்சிருக்காங்க. ஆனா, இது அமலுக்கு வந்தா, வெளிநாட்ல இருந்து அமெரிக்காவுக்குப் போற ஆயிரக்கணக்கான மாணவர்களோட கனவு கேம் ஓவர் ஆக வாய்ப்பு இருக்கு.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments