Ticker

6/recent/ticker-posts

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு


தாய்லாந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பில், அந்நாட்டுப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அவரது பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, தாய்லாந்து அரசமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த மோதல்கள் மீண்டும் வெடித்தபோது, பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தாய்லாந்தின்  36 செனட்டர்கள் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரி அரசமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அரசமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறை விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக கண்டறிந்து, அவரை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்து தீர்ப்பளித்தது. இந்த அதிரடி தீர்ப்பு, தாய்லாந்து அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் செய்தி, நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

webdunia

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments