
2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விவாதங்கள் இந்த அணித்தேர்வின் மீது இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வரும் அபாயத்தில் இருக்கிறது. ஏனெனில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீசை வெளிப்படுத்தியிருந்த அவர் அந்த தொடரின் போது ஏற்பட்ட காயத்தினால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் பாதிப்பை சந்தித்து வருகிறார்.
சொல்லப்போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் அவர் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோன்று கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட காயத்தால் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு திரும்பவில்லை.
அதேபோன்று தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அவரது கரியர் அபாயமான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது 34 வயதினை எட்டியுள்ள முகமது ஷமிக்கு எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் முற்றிலுமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களை இந்திய அணி வளர்த்தெடுத்து வருகிறது. எனவே அனுபவ வீரரான முகமது ஷமியை வெளியேற்றிவிட்டு அவரது இடத்திற்கு புதிய வீரரை இந்தியன அணி தயார் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது முகமது ஷமியின் எதிர்காலம் குறித்து தெரியவரும். ஏனெனில் அந்த தொடரிலும் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் அவரது கரியர் முடிந்துவிட்டது என்றே கூறலாம்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments