
காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ அழைப்பு விடுத்துள்ளார்.
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதல், 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில், இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருதரப்புக்கும் இடையே 60 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சி இறுதிக்கட்ட எட்டியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது. அதேநேரம் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாலஸ்தீனியர்களை தாங்கள் வெளியேற்றவில்லை என்றும், வெளியேற அனுமதிப்பதாகவும் அவர் கூறினார். முதலில் போர் நடைபெறும் பகுதியை விட்டும், பின்னர் எல்லையை விட்டும் வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிரியா, உக்ரைன், ஆப்கானிஸ்தான் போர்களின்போதும், அகதிகள் வெளியேறியதை குறிப்பிட்ட அவர், 1945-ல் பெர்லின் நகரில் நாசிப் படையினரை நீங்கள் விட்டுவைக்கவில்லை என்ற நிலையில், 2025-இல் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் விட்டுவைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
பெஞ்சமின் நெதன்யாகூவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, தாக்குதல் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments