
அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தனது பழைய வீடியோ ஒன்றில் இந்தியா குறித்து துப்பாக்கியில் எழுதிவைத்திருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மினியபோலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் தொடங்கும் போது அங்குள்ள தேவாலயத்தில் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது தேவாலயத்திற்கு வெளியே வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும், 20 வயது நபரான இவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தேவாலயம் குறித்த தகவல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியாகின.
இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் சில பழைய வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அவர் வைத்திருந்த ஆயுதங்களில் nuke India, kill Donald Trump போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments