Ticker

6/recent/ticker-posts

ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? முகமது ஷமி கொடுத்த விளக்கம் – விவரம் இதோ


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக முதன்மை இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அண்மையில் காயத்திலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்த அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கம்பேக் கொடுப்பார் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இவ்வேளையில் அவர் திலிப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கை வீரராக வலம் வந்த முகமது ஷமி இப்படி இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 35 வயதான முகமது ஷமி தனக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காதது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்கு தேர்வாகாதது குறித்து யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதைத்தான் தேர்வாளர்கள் செய்கின்றனர். அதனால் எனக்கு யார் மீதும் வருத்தமும் இல்லை .தற்போதைக்கு இந்திய அணியின் தேர்வாளர்கள் சரியான வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் என்னுடைய திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய சிறப்பான செயல்பாட்டை நான் நிச்சயம் வெளிப்படுத்துவேன். தற்போது வரை நான் மிகச் சிறப்பாக பயிற்சி பெற்று வருகிறேன். அதோடு துலீப் டிராபி தொடரிலும் விளையாடி வருகிறேன். இந்த தொடரில் விளையாட முடியும் என்றால் நான் ஏன் டி20 போட்டிகளில் விளையாட முடியாது.

இனிவரும் போட்டிகளில் என்னுடைய பழைய பார்மை திரும்ப கொண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடுவேன் என முகமது ஷமி கூறியுள்ளார். தற்போது இந்திய அணியின் நிர்வாகம் அடுத்த கட்ட இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து வருவதால் முகமது ஷமியின் எதிர்காலம் சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments