Ticker

6/recent/ticker-posts

காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்... 52 பொதுமக்களுக்கு நேர்ந்த கொடூரம்!


காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையே சண்டையில் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

காங்கோ

காங்கோவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதலுக்கு 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் காங்கோ அரசுப் படைகளுக்கு இடையே சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் இஸ்லாமிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் 8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். M23 கிளர்ச்சியாளர்கள், டுட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் கிழக்கு காங்கோவில் நிலப்பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ருவாண்டா அரசாங்கம், M23 கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதாக காங்கோ அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக காங்கோவின் கிழக்கு பகுதி கனிம வளங்கள் நிறைந்த செழிப்பான பகுதி என்பதால் இந்தப்பகுதியை கட்டுப்படுத்த பல குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்கள் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் உட்பட, மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. M23 கிளர்ச்சியாளர்கள், கோமா போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

news18


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments