
தேவையானவை
6- முழுக் காய்ந்த காளான்
இதை இரு நாள் ஊற விடவும்
நீர் மாற்றிக் கொள்ளவும்.
3- கத்தரிக்காய்
2- தக்காளி
25- கிராம் நன்றாக சுத்தம்
செய்த உப்பு இல்லாத நெத்தலிக் கருவாடு.
2- பெரிய வெங்காயம்
5- பல்லு பூண்டு
1- எலுமிச்சம் அளவு புளிக் கரசல்
1- மேசைக் கரண்டி வறுத்த வெந்தையம்
1- கைப் பிடி புதிய கறிவேப்பிலை
1- கொத்து மல்லி இலை
2- பச்சை மிளகாய்
4- மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்
4- மேசைக்கரண்டி மீன் கறித் தூள் (சொந்தமாய் தயார் செய்து அம்மியில் அரைப்போர் தேவைக்கு ஏற்ப எடுக்கலாம்)
1- டம்ளர் கெட்டிப் பால் தேங்காயோ அல்லது மாப்பாலாகக் கூட இருக்கலாம்.
தாளிக்கத் தேவையான எண்ணெய்
தேவைக்கு ஏற்ப உப்பு மஞ்சள்
(மிளகு சிறு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வறுத்த பொடி இருப்பின் அதில் 1- மேசைக் கரண்டி எடுத்து காளானை நன்றாகக் கழுவி தேவைக்கு ஏற்ப துண்டு போட்டு அதனுடன் இப் பொடியை சேர்த்து 30 நிமிடம் ஊறவிடவும்)

செய் முறை
வெங்காயம் பூண்டு இரண்டையும் நறுக்கி எண்ணெய் சூடான பாத்திரத்தில் போட்டு வதக்கவும் பாதி வதங்கும் போதே நெத்தலியைக் கழுவி அதனுடன் சேர்த்து வதக்கவும் 5 நிமிடத்தால் காளானையும் சேர்த்துக் கிளறவும் பின்னர் புளிக் கரசல் உப்பு மஞ்சள் மிளகாய்த் தூள் இரண்டையும் சேர்த்து 5- டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விடவும் நன்றாகக் கொதித்து நீர் 3- டம்ளர் அளவு வந்ததும் தக்காளி
துண்டு போட்ட கத்தரிக்காய்
இவைகளை சேர்த்து 10- நிமிடம் கொதிக்க விடவும் இறுதியாக பாலை விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அடைக்கவும் கறிவேப்பிலை மல்லி பச்சைமிளகாய் வெந்தயம் போட்டு கிளறி விட்டு மூடி விடவும் .
கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments