
கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடி செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகிடம் சிக்கிய மீன்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், கழுகு ஒன்று மீனை வேட்டையாடி கம்பீரமாக எழுந்துள்ளது. மேலும் தண்ணீரில் இருந்து கழுகு எழும் இந்த நிகழ்வு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மீனை கழுகு கீழே போட்டுவிடுமோ என்ற எண்ணம் தோன்றினாலும், அசால்ட்டாக கொண்டு சென்றுள்ளது. இந்த காட்சியினை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுவதாகவே இருக்கின்றது.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments