Ticker

6/recent/ticker-posts

IPL 2026 | தக்கவைக்கப்பட்ட பின் ஒவ்வொரு அணியில் காஸ்ட்லியான வீரர்.. CSK-ல் இருவர் டாப்


ரிஷப் பந்த் (LSG): 

IPL 2025 மெகா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த சீசனில் லக்னோ தோல்வியை சந்தித்த போதும் IPL 2026 ஏலத்திற்கு முன்னதாகவே அவரை அந்த அணி தக்கவைத்துக் கொண்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் (PBKS): 

பஞ்சாப் கிங்ஸ் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது, மேலும் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக அவர் இருந்தார். அவரது தலைமையின் கீழ், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் இந்த ஆண்டு ஐபிஎல்லில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

ஹென்ரிச் கிளாசன் (SRH): 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டர் ஹென்ரிச் கிளாசனை SRH ரூ.23 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. அவர் ஐபிஎல் 2025 இன் 14 போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி (ஆர்.சி.பி): 

ஐ.பி.எல் 2025 இல் ஆர்.சி.பி-யின் அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி இருந்தார். 2025 ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வென்றாக ஆர்சிபி விரா் கோலியை ரூ. 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார், மேலும் ஐ.பி.எல் 2026 இல் அவர் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார்.

ஜஸ்பிரித் பும்ரா (MI): 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் ஜஸ்பிரித் பும்ராவை ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. மும்பை அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் இவர்தான்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் (CSK): 

2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் CSK-வின் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள். டிரெடிங் முறையில் சாம்சன் CSK-வில் ரூ.18 கோடிக்கு இணைந்தார், அதே நேரத்தில் கெய்க்வாட்டை கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு CSK ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.

அக்சர் படேல் (DC): 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அக்சர் படேலை ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது, மேலும் அவர் ஐபிஎல் 2025 இல் அணியை வழிநடத்தினார்.

ரஷீத் கான் (ஜிடி): 

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகவும் விலையுயர்ந்த வீரர் ரஷீத் கான். ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதாபாத் அணியால் அவர் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஆர்ஆர்): 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. 23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஐபிஎல் 2025 இல் அவர்களுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.

ரிங்கு சிங் (கேகேஆர்): 

கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு விடுவித்த பிறகு, ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக ரிங்கு சிங் கேகேஆரின் அதிக சம்பளம் வாங்கும் வீரராக உள்ளார். அவரை கேகேஆர் அணி ரூ.13 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

news18

 


Post a Comment

0 Comments