Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி -19

அன்பார்ந்த வேட்டை வாசகர்களே உங்களை சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
   
நம் உடல் நலம் குறித்த பல செய்திகளை ஒவ்வொரு வாரமும் கண்டு வருகின்றோம். மனிதன் என்பவன் இயந்திரம் அல்ல இயற்கை மனிதன் அறிவுப்பூர்வமானவன் உணர்வுபூர்வமானவன். உயிரோட்டம் உள்ளவனை தான் நாம் மனிதன் என்று அழைக்கிறோம்.உயிரோட்டம் இல்லையேல் அவன் உயிரற்ற பிணம் தான்.

ஆரோக்கியமான இரண்டு கண்கள்,இரண்டு கால்கள், கைகள்,இரண்டு காதுகள்,,விரல்கள் நலமான இரண்டு சிறுநீரகங்கள்,ஒரு இருதயம், வயிறு கல்லீரல், மண்ணீரல், கொஞ்சம் எலும்புகள், நரம்புகள், தசைகள், கொஞ்சம் ரத்தம், இன்னும் பல உறுப்புகளையும் தொகுத்து இணைத்து ஒரு உயிர் மனிதனை உருவாக்கி விட முடியாது. 

காரணம் அதில் உயிரோட்டம் இருக்காது.ஆனால் பல உதிரிபாகங்களை வெவ்வேறு இடத்தில் வாங்கி ஒன்று சேர்த்து எந்த ஒரு இயந்திரத்தையும் தயாரித்துவிட முடியும். இயங்க வைத்து விடவும் முடியும். இதுவே மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் அதாவது இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள மாபெரும் வித்தியாசமாகும்.

இதன் காரணமாகத்தான் நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதனின் ஒரு பகுதியை மட்டும் ஒரு உறுப்பை மட்டும் நலமாக்க முயல்வது முட்டாள்தனமாகவும் முடியாததாகவும் ஆகிவிடுகிறது. மேலும் அதை நோயை அகற்றுவது ஆகாது அதை உள்  அமுக்குவதாகும்.

 நோய்வாய்ப்பட்ட மனிதனின் ஒரு பகுதியையோ உறுப்பையோ கவனிப்பதால் உண்மையில் பாதிக்கப்பட்ட மனிதனின் உயிரற்று பாதிக்கப்பட்டபடியே இருப்பதால் அது வேறொரு பகுதியையோ உறுப்பையோ தாக்கத் துவங்கி விடுகிறது. இதுவே தொடர்கதையாக தீராத தீவிர நோயாக ஆகிவிடுகிறது.

ஆகவே கிருமிகளால் தான் நோய்கள் வருகின்றது என்பது தவறான கருத்தாகும்.நோயினால் தான் கிருமிகள் வருகின்றன.உணவைத் தேடியே உயிர்கள் வரும் உயிர்களைத் தேடி உணவு செல்வதில்லை என்பது இயற்கை விதியாகும்.

நோய் என்பது கெட்ட உணவு சக்தி அதை உண்டு வாழ வளர கெட்ட கிருமிகள் அதிலிருந்து உற்பத்தி ஆகின்றது அல்லது வெளியில் இருந்து வருகின்றது. கிருமிகளை வைரஸ்களை பாக்டீரியாக்களை கொள்ளுவதால் மீண்டும் மீண்டும் கிருமிகள் தோன்றவே செய்யும். மாறாக கெட்ட உணவு சக்தியை அகற்றுவதோ அல்லது அதை நல்ல எனர்ஜியாக மாற்றுவது தான் நிரந்தரமாக நோயை தீர்க்கும் சிகிச்சை முறையாக இருக்க முடியும்.

எவ்வாறு கிருமிகள் நோய்கள் இல்லையோ நோய்களை தோற்றுவிப்பதில்லையோ.உதாரணமாக நீரழிவு என்பதும் நோயில்லை. அது நோயைத் தோற்றுவிப்பதும் இல்லை. 

அதுபோல நீரிழிவு என்ற நோய் தங்கி வளர்வதற்கும் தாக்குவதற்கும் ஏற்ற சூழ்நிலை அந்த மனிதரிடம் உள்ளது என்பதே இதன் சரியான பொருளாகும்.அதாவது தரமற்ற குளுக்கோஸை தயாரிக்கும் முறை கெட்ட ஜீரணமே அந்த குறிப்பிட்ட நோயின் ஆணிவேராகும்.

சென்ற தொடரில் நாம் நோய்க்கான ஆணிவேரை சரி செய்தாலே ஒழிய நோய் நிவாரணம் கிடைக்காது என்பதை பார்த்தோம்.அதுபோலவே முறைக்கிட்ட ஜீரணம் அதாவது கெட்ட சக்தியை நீக்குவது போலவே நீரழிவுக்கான சூழ்நிலையை அந்த மனிதரிடமிருந்து அகற்றி விட்டால் சுத்தப்படுத்தி விட்டால் நீரழிவு என்பது தானாகவே காணாமல் போய்விடும். மாறாக நீரிழிவு நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிப்பது என்பது மனிதனை நலப்படுத்தாது. கடுமையான பக்க விளைவுகளை மட்டுமே பரப்பும்.

மேலும் ஒரு நோயாளி தனக்கு எந்த இடத்தில் எந்த பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறாரோ அந்த இடத்தில்தான் அந்தப் பகுதியில் மட்டும் தான் நோய் இருக்கிறது என்று நம்புவது மூட நம்பிக்கையாகும். இதனால்தான் நோய்வாய்ப்பட்ட பகுதியை எப்படி பரிசோதனை செய்ய பார்த்தாலும் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடிவதில்லை.  நிச்சயமாக கண்டுபிடிக்கவும் முடியாது.

மனித வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமானது உணவு. அதாவது உணவில் உள்ள ஊட்டச்சத்து எந்த பொருளும் உடலுக்கு ஒவ்வாதது அல்ல. உதவாதது கிடையாது. கறிவேப்பிலை முதல் பாதாம் பருப்பு வரை இயற்கையான அனைத்து உணவு பொருட்களிலும் அதன் தகுதிக்கு ஏற்றவாறு தன்மைக்கேற்ற வாரும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

எனவே எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அது மனிதனின் இயல்பான இயக்கத்திற்கும் தேவையான ஊட்டச்சத்து ஆக மாற்ற வேண்டும் என்றால் அது அவரவர் உடலின் முறையாகவும் முழுமையானதாகவும் ஜீரணமாக வேண்டும். இவ்வாறு ஜீரணமான பின்னர் ஜீரணத்தின் கடைசி நிலையில் தான் மனிதனுக்கு தேவையான சக்தியான ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஒரு உணவு பொருள் நன்கு ஜீரணிக்கப்பட்டு அதன் கடைசி நிலையில் இருக்கும் ஊட்டச்சத்தையே நாம் குளுக்கோஸ் என்கிறோம் இதுவே மனிதனின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் ஒவ்வொன்றிற்கும் அடிப்படையில் ஆகிறது.

இந்த உணவை தான் எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒவ்வொரு தொடரிலும் பார்த்து வருகின்றோம்.

 மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 


டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).     



 



Post a Comment

0 Comments