Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-5


3. நீத்தார் பெருமை

குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கமான உண்மைத் துறவிகளை நூல்கள் பழுதின்றிப் போற்றும் உணர்.

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

இறந்தோர் அளவைக் கணித்தல் அரிது! துறவிப் பெருமையும் தான்.

குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

இருநிலை இன்பதுன்பம் நன்கறிந்தே ஆசை அறவே நீக்கல் உயர்வு.

குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உறுதியெனும் அங்குசத்தால் ஐம்புலனை வென்றோன் துறவு நிலத்திற்கு வித்து.

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments