
பாடல் - 9.
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
விளக்கம்:
நீரோட்டம் இல்லாமல் கால் சுடும் அளவிற்கு நீர் வற்றிப் போனாலும், ஆறானது ஊற்று நீர் கொடுத்து உலகுக்கு உதவுகிறது.
அது மாதிரி தான், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள், அடுத்தவர் உதவி என்று கேட்கும் போது, தங்களிடம் உள்ள பொருளை மனமுவந்து கொடுத்து உதவுவார்கள்.
பாடல் - 10.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்
விளக்கம்:
எத்தனை ஆண்டுகள் தரையில் புரண்டு அழுதாலும், இறந்து போனவர்கள் உயிருடன் திரும்ப வரப் போவதில்லை.நமக்கும் இறப்பு என்பது உறுதியாக உண்டு.
அதனால் உயிரோடு இருக்கும் காலத்தில், நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments