Ticker

6/recent/ticker-posts

Ad Code



16.5 மில்லியன்.. ப்ரேவிஸை தட்டி தூக்கிய தாதா கங்குலி அணி.. தென் ஆப்ரிக்காவில் சிஎஸ்கே போராடி ஏமாற்றம்


தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 2022 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணி அவரை தங்களுக்காக விளையாட வாங்கியது. இருப்பினும் அந்த அணியில் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய ப்ரேவிஸ் கழற்றி விடப்பட்டார்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட குர்ஜப்நீத் சிங் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக ப்ரேவிஸை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம் கடைசிக்கட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்புகளைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் அட்டகாசமாக விளையாடிய அவர் சிஎஸ்கே அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.

அந்த சூழ்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 125* (56) ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அத்தொடர் முழுவதுமே அசத்திய அவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அதிரடியாக விளையாடினார். அதனால் 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் அவரை வாங்காமல் தவற விட்டு விட்டதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தார்.

மேலும் சிஎஸ்கே அணி ப்ரேவிஸை மாற்று வீரராக வாங்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் அவர் பாராட்டினார். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடருக்கான 2025 சீசன் வீரர்கள் ஏலம் இன்று ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் ப்ரேவிஸை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் டெல்லி ஐபிஎல் அணிகளின் கிளைகளான ஜேஎஸ்கே – பிரிட்டோரியா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

குறிப்பாக சிஎஸ்கே போல தென்னாப்பிரிக்காவிலும் ப்ரேவிஸை தங்களுக்காக விளையாட வைக்க வேண்டும் என்பதற்காக ஜேஎஸ்கே கடுமையாக போராடியது. ஆனால் அதற்கு விட்டுக்கொடுக்காத பிரிட்டோரியா கேப்பிட்டல் அணி 16.5 மில்லியன் ரண்ட்டுக்கு ப்ரேவிஸை வாங்கியது. இம்முறை பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய ஜாம்பவான் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஏலத்தில் பங்கேற்ற அவர் நேரடியாக ப்ரேவிஸை 16.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 8.31 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். இதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ தொடரில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ப்ரேவிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் ஐடன் மார்க்ரம் 14 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டதே முந்தைய சாதனை. அதனால் தென்னாப்பிரிக்காவில் ஜேஎஸ்கே அணி ஏமாற்றத்தை சந்தித்தது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments