Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-6


சுற்றந்தழால்

குறள் மொழி 10

10. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

குறள் மொழியின் பொருள் :

குறள் எண் : 527

தனக்குக் கிடைத்த உணவு சிறிதளவாயினும் காக்கை தன் இனத்தைக் கரைந்து அழைத்துக் கூடித்தின்னும். அது போல, உறவினர் சூழ அன்புடன் மகிழ்ந்து வாழ்கின்றவர்களுக்கே செல்வம் மிகும்.

நபிமொழி

"எவர் அல்லாஹ் (இறைவன்) தமக்கு வாழ்க்கையில் விரிவையும் அதாவது வளத்தையும், நீண்ட ஆயுளும் வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர்தம் உறவினர்களுடனும், சுற்றத்தாருடனும் நன்முறையில் உறவாடவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, திர்மிதி 1051.

(தொடரும்)


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments