
பஞ்சு மிட்டாய் போலே
பறந்து வரும் பச்சைக்கிளி
பள்ளியறையில் பார்த்தவளோ
பழனியிலே நின்றவளோ
பருவமழையாய் வந்து
பரந்தமனதில் விழுந்து
பறித்துப் போறாளே
பன்னீர்ப்பூச்சாய் எம்மனதை
பளிங்கு மேனியோ
பல்லக்கின் பவனியோ
பட்டுப்பூச்சியோ வெட்டுக்கிளியோ
பக்கத்திலே வரலாமோ
பருவம் கொண்ட
பசுந்தழைப் பெண்ணே
பட்டெனச் சொல்லம்மா
படபடக்கிறது நெஞ்சமடியம்மா
பஞ்சமில்லை பாசத்துக்கும்
பஞ்சாயத்தும் தேவையில்லை
பட்டுப்புடவை வாங்கித்தருவேன்
பல்லாவரம் கூட்டிப்போவேன்
பங்குனிமாதக் குளிரானவளே
பங்களிப்புத் தருவாயோ
பட்டினியாய் விடுவாயோ
பனிமொழியாளே பாரம்மா
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments