
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஓய்வுபெற்ற 72 வயதான முதியவர், தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வருகிறார்.
72 வயது முதியவர்
தோளில் புத்தகப்பை, கையில் மதிய சாப்பாடு உடன் கல்லூரிக்கு செல்லும் இந்த முதியவர் கல்லூரியின் முதல்வரோ, பேராசிரியரோ அல்ல, கல்லூரியின் மாணவர் தான்..
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த செல்வமணி என்ற 72 வயது முதியவர் கல்வி கற்க வயது தடையில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள முதியவர் செல்வமணி படிப்பின் மீதான தீராத காதலால், சீர்காழியில் உள்ள சீனிவாசா சுப்புராயா அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் படித்து வருகிறார்.
தினமும் சுறுசுறுப்பாக கல்லூரிக்கு உரிய நேரத்தில் வந்து செல்லும் முதியவர் செல்வமணி தங்களுக்கு ரோல் மாடலாக இருப்பதாக சக மாணவர் ஒருவர் கூறுகிறார். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் செல்வமணியை நண்பராகவே தாங்கள் பார்ப்பதாக சக மாணவர்கள் கூறினர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments