
ஒரு ரெட்டிட் யூசர் தனது மோசமான பழக்கவழக்கங்களால் தனது வேலையை எப்படிச் இழந்தார் என்பதைப் பற்றிய தனது கதையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் கனவு வேலையை பாதிக்கும் போது சில நேரங்களில் நாம் செய்யும் சிறிய தவறுகள் விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஒரு ரெட்டிட் யூசர் தனது மோசமான பழக்கவழக்கங்களால் தனது வேலையை எப்படிச் இழந்தார் என்பதைப் பற்றிய தனது கதையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். பல மாதங்கள் கடின உழைப்புக்குப் பிறகு, அவருக்கு ஒரு பெரிய ரிமோட் ஜாப் கிடைத்தது, அது அவருடைய கனவு வேலையாகும். ஆனால் அதைக் கையாளுவதற்குப் பதிலாக, அவர் அதை தானே கொடுத்துக் கொண்டார்.
இரவு வெகுநேரம் வரை ஃபோனைப் பயன்படுத்தும், சாட் செய்வதும் அவருடைய மிகப்பெரிய தவறு. இதனால் இரவில் தூக்கத்தை கலைத்து, காலையில் தாமதமாக எழ ஆரம்பித்தார். சில நேரங்களில் அவர் 10-15 நிமிடங்கள் தாமதமாக எழுந்திருப்பதால், வேலையை தாமதமாக ஆரம்பித்தார். இது தொடர்ந்து நடந்துக்க கொண்டே இருந்ததால், முதலாளியின் கவனத்திற்கு சென்றது. ஒரு நாள் அவருடைய மேனேஜர் அவரை தொடர்புக்கு கொண்டு, ஏன் வேலையை தாமதமாக தொடங்குறீர்கள் என்று கேட்டபோது, அவர் உண்மையைச் சொல்வதற்குப் பதிலாக, தொழில்நுட்ப சிக்கலைச் சாக்குப்போக்காக சொன்னார். ஆவர் கூறிய இந்தப் பொய் ஆனது அவரது வேலையை இழக்க வைத்தது.
இதனால் மனமுடைந்த ரெட்டிட் யூசர், சரியான நேரத்தில் எழுந்திரிக்காததால், இப்படி ஒரு வாய்ப்பை இழந்ததற்கு வருந்தினார். எனது கனவு வேலையை இழந்த வலி உண்மையில் என்னை உணர்ச்சி ரீதியாக பாதிக்கிறது என்று கூறியுள்ளார். தான் செய்த தவறை ஒப்புக்கொண்டாலும், அந்த பதிவில் தன்னை 'முட்டாள்' என்று பலமுறை கூறிக்கொண்டார். ரெடிட்டில் பதிவிடப்பட்ட இந்த கதை விரைவில் வைரலானது.
அந்த பதிவில், என் முட்டாள் தனத்தால் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன், நான் முற்றிலும் தோற்றுப் போனவன் போல் உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவனாக இருக்கிறேன், மீண்டும் முதல் நிலைக்குத் திரும்புகிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, எனக்கு இரண்டு வேலைகள் கிடைத்தன, அவை மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தன. வருடம் முழுவதும் தினமும் வேலைக்கு விண்ணப்பித்த பிறகு, எனக்கு நல்ல சம்பளத்துடன் ரிமோட் ஜாப் கிடைத்தது.
இதைத்தான் நான் விரும்பினேன். ஆனால் நான் இரவு முழுவதும் ஸ்க்ரோலிங் செய்து, சாட் செய்தேன். சில நாட்களில் நான் 10-15 நிமிடங்கள் தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் நான் வேலையை தாமதமாக ஆரம்பிப்பேன். இது பல முறை நடந்தது. மேலும், மேனேஜரிடம் பொய் சொன்னது தனது மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து பல்வேறு வகையான எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டன. சில நெட்டிசன்கள் அனுதாபம் காட்டினாலும், பலர் கோபமாக பதிலளித்தனர். அதில் ஒரு யூசர், 40 நிமிட தூரத்தில் இருந்துபோது, சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வந்த ஒரு நபர், அலுவலகத்திற்கு அருகில் வசிக்கத் தொடங்கியதும், அவர் அலுவலகத்திற்கு தாமதமாக வரத் தொடங்கினார் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு விலையுயர்ந்த பாடமாக கருதுங்கள் என்று கேலி செய்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments