

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான குழு, 2025 செப்டம்பர் 22 ஆம் திகதி,, ஐ.நா. பொதுச்சபையின் 80வது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயார் நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அவருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரத் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்துள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, பொதுச்சபையில் செப்டம்பர் 24ம் திகதியன்று மதியம் 3:15 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி, ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டானியோ குட்டரஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வதோடு, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
"ஒன்றிணைந்து சிறப்பாக: அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்" என்ற தனிப்பட்ட பொருளைக் கொண்ட இந்த அமர்வுக்கு புதிய தலைவர் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேர்பாக் ஆவர்; இவர் ஐ.நா. வரலாற்றில் ஐந்தாவது பெண் தலைவராக உள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணம் தனது நாட்டின் பொருளாதார மீட்சி, தேசிய இணக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்களில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பொதுச்சபையின் 80வது அமர்வில் நிகழ்த்தவுள்ள உரையின் முக்கிய தலைப்புகள் பற்றி அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை; இருப்பினும், இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழலின் அடிப்படையில் அவரின் உரை முக்கியத்துவம் பெறலாம்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கான முயற்சிகள், நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு, சர்வதேச நிதி ஒத்துழைப்பும் கடன் மறுசீரமைப்பும், இன மற்றும் மத ரீதியிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள்,உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு,பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்பு, தெற்காசியாவின் பிராந்திய ஒத்துழைப்பு, இலங்கையின் கடல்சார் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இலங்கையின் பங்களிப்பு, 80வது ஆண்டு விழாவில் இலங்கையின் நீண்டகால ஆதரவையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஐ.நா.வின் முக்கியத்துவத்துவம் போன்றன பற்றி வலியுறுத்தப்படும் வகையிலும், பொதுச்சபையின் தொனிப்பொருளான "ஒன்றிணைந்து சிறப்பாக: அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்" என்பதையும் அடிப்படையாகக் கொண்டவையாக அவரது உரை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments