
தேவையானவை
உங்கள் தேவைக்கு ஏற்ப
அனைத்துப் பொருட்களும் .
தக்காளி
தனி மிளகாய்த் தூள்
பட்டை -ஏலக்காய் -கராம்பு -சோம்பு
சிறு சீரகம் -ரம்பை இலை -கறிவேப்பிலை
மல்லித் தழை -புதினா -கரமசாலா தூள்
மஞ்சள் -உப்பு -எண்ணெய் -மாஜறிம் -பசுமதி அரிசி ஒரு கப் தேங்காய்ப் பால் -முந்திரிப் பருப்பு -கொடிமுந்திரி காய்ந்த பழம் -கரட் வெங்காயம் - இஞ்சி பூண்டு -அரைத்த விழுது
சிக்கன்சோஸ் -.பழப்புளி -பட்டையிலை
பச்சைமிளகாய்.

நண்டை சுத்தம் செய்து மஞ்சள் உப்பு புளி சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும் .
அடுப்பில் பாத்திரத்தை வைத்து மாஜறிம் எண்ணெய் இரண்டும் சம பங்கு விட்டு. சூடானதும் பட்டை ஏலக்காய் சோம்பு சீரகம் பட்டை இலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் சோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
.வதங்கும் போதே தக்காளி நண்டு இதனை சேர்த்து வதக்கி .நண்டு பொரிந்து வருவது போல் இருக்கையில். மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீரும் விட்டு நன்றாகக்
கொதிக்க விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு அளவாக நீர் விட்டு .அதில் ரம்பை இலை மாத்திரம் போட்டு சோறு அரை வேக்காடாக சமைத்துக் கொள்ளவும்.
நண்டு அவிந்து நீர் சுண்டியதும். பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் .அதன் மேலே சோற்றை போட்டுக் கொள்ளவும் .
அடுப்பை நன்றாக குறைத்து எரிய விடவும்
சோற்றுக்கு மேல் சிறுதளவு மாஜறிம் போட்டு விட்டு .பொரித்த முந்திரிப் பருப்பு உலர்ந்த திராச்சைமல்லி ரம்பை இலை புதினா கரமாசாலா அனைத்தையும் தூவி பச்சைமிளகாயைக் கீறிப் போடவும் கரட்டைத் துருவிப் போடவும்
மூடி விடவும் 25இருந்து 45. நிமிசம் கழிச்சு அடுப்பை விட்டு இறக்கி தட்டையான பாத்திரத்தில் கொட்டி மிஸ் பண்ணி பரிமாறவும்.
கலா
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments