Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-95


அவன் அவைகளை வெளியே எடுத்து அடுக்கிக் கொண்டே கேட்டான் 
"என்ன சமையல் சந்திர அண்ணா" என்று.  

அதற்குப் பதில் சந்திரன் சொல்லும் முன்பே மூத்த மருத்துவர் தன் வாயைத் திறந்தார்.  

"இன்று இறுதி உணவு என்பதாலோ,தெரியவில்லை குமரகுரு மருத்துவரே நல்ல விருந்தாகவே தென் படுகிறது.   வாருங்கள் சந்தோசமாய் அள்ளி வைத்து உண்ணுங்கள், இணைந்தே உண்ணலாம்  வாருங்கள், விரைந்து"  என்று கேலியோடு அக்கறையுமாக அழைத்தார்.

குமரன் புன்னகைத்த வாறே பதில் கொடுத்தான்.
"நல்லது ஐயா இதோ வருகிறேன். தாங்கள் கூறியது போல் இன்று மாத்திரமே நாம் இணைந்து உணவருந்தும் நாளாகவே இருக்கும். ஆகையால் பகை மறந்து போட்டி திறந்து நாம் எல்லோரும் ஒரே இனம் அதாவது மருத்துவ இனம் மனித இனம் என்னும் நோக்கோடும் நண்பர்கள் என்னும் எண்ணத்தோடும் கதை பேசி மகிழ்ந்து உணவை சுவைத்து உண்ணுவோம் சரிதானே." என்று கூறிக் கொண்டே வந்து அமரர்நாதன்.

"சரிதான் குமரா" என்றார் சந்திரன் மருத்துவர். "சரி குமரா மகாராணியைச் சந்தித்துப் பேசி விட்டாயா?.இன்று உமது இல்லம் செல்வது உறுதியாச்சா?" என்று சந்திரன் கேட்கவே ,ஏனைய மருத்துவர்களும் 
"ஆமாம் அதையே நாங்களும் கேட்க நினைத்தோம்" என்று ஒருமித்தமாய்க் குரல் எழுப்பினார்கள் மூத்த மருத்துவரைத் தவிர்த்து.

"ஆம் நான் இன்று வீடு திரும்புவது உறுதி நண்பர்களே உங்களை அதிகம் நேசித்தேன்  எப்போ எங்கே கண்டாலும் மறவாது பேசிக் கொள்வோம்  மருத்துவத் தேவை எங்கும் இருந்தால் அறியத் தரும் வழி முறை ஒன்றை அறிமுகம் செய்து வையுங்கள்"  என்றான் குமரன்.
 
"நன்றி குமரா. நல்ல மனசு உங்களுக்கு  கண்டிப்பாக நம் உறவு தொடர வேண்டும்" என்றார்கள் எல்லோரும் .

அப்போது மூத்த மருத்துவர் குமரனைப் பார்த்துக் கேட்டார். "அதெல்லாம் சரி நாளை நான் மருத்துவம் ஆரம்பிப்பது பற்றிப் பேசவில்லையே.நீ. அது பற்றி மகாராணி ஏதும் சொல்லவில்லையா?" என்று குமரனிடம் கேட்டார்.

அதற்குப் பதில் கொடுத்த குமரன் "சற்று நேரம் காத்திருங்கள் அறிவிப்பு வரலாம் அந்த அறிவிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எதற்கும் தயார் நிலையில் இருங்கள் என்னைப் போல்" என நாசுக்காகச் சொல்லி முடித்தான்.

'என்னைப் போல்' என்று அவன் கூறியவை மூட்டை முடிச்சைக் கட்டித் தயாராக இருக்குமாறு மூத்த மருத்துவர் நினைத்தது மருத்துவம் செய்யத் தேவையானவையோடு தயாராகச் சொல்லுவதாய்  எல்லாம் தயாராக உள்ளது எனப் பதில் கொடுத்தார் 

பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டார்கள்.

எழுந்ததும் ஒவ்வொருத்தரின் விலாசத்தையும் குமரன் கேட்டு எழுதிக் கொண்டு இருந்தான். மூத்தவர் மாத்திரம் கொடுக்க மறுத்து விட்டார். 

"அதெல்லாம் வேண்டாம் இது வரை நீடித்த உறவே போதும்" என்று 
கூறி விரைந்து விட்டார் .

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments