
குமரன் எதிர் பார்த்திடாத பதிலே அவை சற்று ஏமாற்றமும் வலியும் கொடுத்தது அவனுக்கு.
அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை .
அதே நேரம் மகாராணியாரும் மந்திரியும் ராஜகுமாரி இருக்கும் இடத்துக்கு விரைந்தார்கள். அவர்களைக் கண்ட மீனா பானு இருவரும் எழுந்து வந்து "வணக்கம் அரசே வாருங்கள்" என்று அழைத்தார்கள் .அப்போது அருகே இருந்த மந்திரிக்கும் "வணக்கம்" வைத்தார்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் ராஜகுமாரியைத் தேடினார்கள். விழிகளாலே.அதைக் கவனித்த பானு "அரசே ராஜகுமாரி இன்னும் உறக்க நிலையில் உள்ளார்" என்றாள் .
"அப்படியா சரி நான் பார்த்து விடுகிறேன் அப்புறமாக இப்போது நீங்கள் கூறுங்கள் நம் ராஜகுமாரியிடம் மாற்றம் உள்ளதா? அவரின் நிலை என்ன?" என்று கேட்டார்.
பானுவும் மீனாவும் என்ன கூறுவது உண்மையைச் சொல்ல வில்லையா? மருத்துவர் மகாராணியிடம் என யோசித்த வாறே கேட்டார்கள். "மன்னிக்க அரசே தங்களைக் காண மருத்துவர் வரவில்லையா?. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கொண்டுப் போவதாகக் கூறியே வந்தார். அதுவரை எங்களிடம் ராஜகுமாரியைக் கண் கானிக்குமாறு கூறினார் அரசே" என்றார்கள் .
"ம்ம்ம் சரி நான் சந்தித்தேன் மருத்துவரை ஒரு சிறு சந்தேகம் அதுதான் உங்களிடம் கேள்வி தொடுத்தேன்" என்றவர்
மந்திரியாரை அமரும் படி கூறி விட்டு ராஜகுமாரி உறங்கும் அறை நோக்கி விரைந்தார் .
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments