Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

உலகம் எங்கே போகிறது?


வானம் விரிந்தது உண்மை,
ஆனால் பசியால் வாடும் வயிறு
இன்னும் கண்களை 
மூட வைக்கவில்லை.

ஒருவர் உணவை வீணாக்க,
மற்றொருவர் உயிரை இழக்கிறான்.
சமநிலையற்ற தராசில்,
மனிதம் எங்கே ஒளிந்தது?

போர் என்ற பெயரில்
படுகொலை நடக்கிறது,
அதன் சாம்பலில்
குழந்தையின் சிரிப்பு எரிகிறது.

அன்பை விற்று
பணம் வாங்கும் மனிதர்,
நட்பை ஏமாற்றி
அதிகாரம் தேடும் தலைவர்கள்,
இதுவே உலகின் முகமா?

உலகமே!
ஒரு துண்டு அப்பம்,
ஒரு துளி கருணை,
ஒரு சிரிப்பு,
இவையே உன் வெற்றிப் பாதை.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments