
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களையும் விமர்சித்துள்ளார்.
அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார். அவருடைய கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக பொன்சேகா கூறியுள்ளார்.
அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments