
அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து நாடு திரும்பியது. அதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதாக பரவி வதந்தி குறித்தும், இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்தவரை நான் மீண்டும் திரும்பி வரும் எண்ணத்தில் இல்லை. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை வீரராக என்னுடைய பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் ஆர்சிபி அணியின் நிர்வாகத்தில் இடம்பெறும் எண்ணம் உள்ளது.
அதனால் எந்த பதவியாக இருந்தாலும் ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் வருவது குறித்து முடிவு செய்வேன் என ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறினார். மேலும் முன்னாள் ஆர்.சி.பி வீரரும், தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முகமது சிராஜ் பந்து வீசிய விதம் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. அவரிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இன்னும் தான் விளையாடும் அணியின் வெற்றிக்காக முழு மனதுடன் போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. அவர் எந்த ஒரு அணிக்காக விளையாடினாலும் அந்த அணியின் சொத்து தான்.
அந்த அளவிற்கு முழு மனதுடன் அணியின் வெற்றிக்காக மட்டுமே போராடும் குணம் கொண்டவர். நான் ஆரம்ப காலகட்டங்களில் பார்த்த சிராஜுக்கும் தற்போதைய சிராஜுக்கும் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கிறது. தற்போது அவரை அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார் என முகமது சிராஜை ஏ.பி.டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments