Ticker

6/recent/ticker-posts

தந்தையுடன் திருமணத்தை மீறிய உறவு.. பெண்ணை கொடூர கொலை செய்த மகன்.. விசாரணையில் அதிர்ச்சி!


தூத்துக்குடியில், காவலரான தந்தையுடன் உள்ள திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த பெண்ணை, காவலரின் மகன் உள்ளிட்ட இரண்டு இளம் சிறார்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மனைவி சக்தி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசுப்பு கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சக்தி மகேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் கணவன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரியாமல் இருவரது பழக்கமும் தொடர்ந்து வந்துள்ளது. இதனிடையே, தலைமைக் காவலர் ராஜேந்திரனின் திருமணத்தை மீறிய உறவு அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, காவலரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், இந்த தொடர்பை விட்டு விடும் படி ராஜேந்திரனிடம் கூறியுள்ளனர். அதேபோல் சக்திமகேஸ்வரியிடமும், தகாத உறவை விட்டு விடும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இருவரும், அவர்களது வார்த்தைகளையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பழகி வந்தததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தலைமைக் காவலர் ராஜேந்திரனின் மகனான இளம் சிறார், அவரது நண்பரான மற்றொரு இளம் சிறாருடன் சேர்ந்து சக்தி மகேஸ்வரியை தீர்த்து கட்ட திட்டம் போட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று கத்தியுடன் சென்ற இருவரும் சக்தி மகேஸ்வரியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து மோப்பநாயை வரவழைத்து சோதனை நடத்திய போலீசார் கொலையை அரங்கேற்றி விட்டு தப்பியோடிய இளம் சிறார்களை தேடி வந்தனர். இந்நிலையில், இளம் சிறார்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். காவலரான தந்தையுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை காவலரின் மகன் உள்ளிட்ட இரண்டு இளம் சிறார்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments