Ticker

6/recent/ticker-posts

இளைஞரை கடித்ததும் இறந்த கொடிய விஷமுள்ள பாம்பு - காரணத்தை பாருங்க


இளைஞரை கடித்ததும் கொடிய விஷமுள்ள பாம்பு இறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம், பாலகாட்டின் குட்சோடி கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் நாக்புரே(25). இவர் ஒரு கார் மெக்கானிக். வழக்கம்போல் தனது பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தற்செயலாக பாம்பை மிதித்துள்ளார்.

அதில் உடனே பாம்பு அவரை கடித்துள்ளது. ஆனால் அந்த கடும் விஷம் உள்ள பாம்பு, அடுத்த 5-6 நிமிடங்களுக்குள் உயிரிழந்துவிட்டது. தொடர்ந்து சச்சின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சச்சின் கடந்த ஏழெட்டு வருடங்களாக வேம்பு, மா, நாவல் மரம் உள்ளிட்ட மூலிகை குச்சிகளால் பல் விளக்குவதால் பாம்புக்கு தன் உடல் விஷமாகியிருக்கலாம் என்கிறார். இருப்பினும் இந்த காரணம் கட்டுக்கதையாகவே இருக்க வாய்ப்பு உள்ள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வனத்துறை அதிகாரி தர்மேந்திர பிசென் இதுதொடர்பாக பேசுகையில், ஒரு பாம்பு ஒரு நபரைக் கடித்த உடனேயே இறக்கும் நிகழ்வு நடக்கலாம்.

கடித்த பிறகு சில சமயம் கூர்மையான பற்கள் உடையும், பாம்பின் விஷப் பை உடைந்து, அதன் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும் என் விளக்கியுள்ளார். அவரை கடித்த பாம்பு டோங்கர்பெலியா எனும் மிகவும் விஷம் நிறைந்த பாம்பு என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ibctamilnadu

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments