Ticker

6/recent/ticker-posts

ஹிந்து உணர்வுகளை புண்படுத்தியதாக புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்


ஹிந்து உணர்வுகளை புண்படுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது ஹந்து அமைப்புகள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வந்தநிலையில், அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என அவர்  விளக்கமளித்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயிலில்  விஷ்ணுவின் சிலையை மறுகட்டமைப்பு செய்து 7 அடி உயரச் சிலையாக நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு   தள்ளுபடி செய்தது. அப்போது பி.ஆர்.கவாய், இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். உங்களது கடவுளிடமே வழிபட்டு தியானம் செய்து தீர்வு காணுங்கள் என கூறினார்.

ஹிந்து மத உணர்வுகளை கவாய் புண்படுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் தெரிவித்தன.

இதற்கு விளக்கமளித்த கவாய், வழக்கு விசாரணை ஒன்றில்போது நான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்படுவதாக தெரிந்து கொண்டேன். அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன் என்றார்.


nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments