Ticker

6/recent/ticker-posts

Ad Code



மரணத்தை வெல்ல திட்டமிடும் புடின், கிம், ஜி ஜின்பிங்: அம்பலமான ரகசிய விவாதம்


சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் மரணத்தை வெல்லும் திட்டம் குறித்து விளாடிமிர் புடின் விவாதித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியும் பிற உலகளாவிய பிரமுகர்களும் சீன தலைநகரில் கூடினர்.

இந்த நிலையில், விழாவின் சிறப்பு விருந்தினர்களான கிம் ஜோங் உன் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் சீன ஜனாதிபதியுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பில் மரணத்தை வெல்லும் திட்டம் தொடர்பில் விவாதித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த மூவரும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முன்னெடுப்பது தொடர்பிலும் விவாதித்துள்ளனர். சமீப காலமாக ரஷ்ய மற்றும் வட கொரிய தலைவர்கள் இருவரும் உடல் நல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன அடிப்படையிலான சிறுபான்மையினரிடமிருந்து சீனா சட்டவிரோதமாக உறுப்புகளை அறுவடை செய்வதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் சூழலில், மரணத்தை வெல்லும் திட்டம் குறித்து மூன்று தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கசியவிட்ட தகவலின் அடிப்படையில், முன்பு, மக்கள் அரிதாகவே 70 வயது வரை வாழ்ந்தார்கள், ஆனால் தற்போதெல்லாம் 70 வயதிலும் நீங்கள் இன்னும் ஒரு குழந்தைதான் என்று ஜின்பிங் புடினிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள புடின், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றிக்கொள்ள முடியும், மேலும் மக்கள் எல்லை இல்லாமல் இளமையாகவும் வாழ முடியும், மேலும் மரணத்தையும் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூற்றாண்டில் 150 வயது வரையில் உயிருடன் இருக்கும் வாய்ப்புள்ளதாக ஜி ஜின்பிங் இதற்கு பதிலளித்துள்ளார்.

சீனாவில் சிறுபான்மை இன மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதும், அவர்களின் ஒப்புதல் இன்றி உறுப்புகள் நீக்கம் செய்யப்படுவதும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் பல ஆண்டுகளாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுபான்மை மக்களிடம் இருந்து பெரும்பாலும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கார்னியா உள்ளிட்ட உறுப்புகளையே நீக்கம் செய்வதாக கூறுகின்றனர்.

lankasri

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments