
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அவர் பாலியல் குற்றவாளிகளுடன் இருக்கும் புகைப்படம் திரையிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது, அவருக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமானமாக கருதப்படுகிறது.
ட்ரம்ப், பாலியல் கடத்தல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில், இங்கிலாந்து சென்ற நாளில், அவர் அந்த பாலியல் குற்றவாளிகளுடன் இருக்கும் புகைப்படம் பொது இடத்தில் திட்டமிட்டு திரையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ட்ரம்பின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த புகைப்படம் வெளியானது ட்ரம்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த செயல், ட்ரம்ப் இங்கிலாந்துக்கு வந்தபோது அவருக்கு எதிராக ஒரு திட்டமிட்ட அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments