Ticker

6/recent/ticker-posts

Ad Code



வடகொரியாவில் Hamburger, Icecream உள்ளிட்ட சொற்களுக்குத் தடை! கிம் ஜாங் உன் உத்தரவு..!


வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு, மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் கலாச்சார தாக்கத்தை குறைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆங்கில மொழியில் பரவலாக பயன்படுத்தப்படும் சில சொற்களுக்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அரசின் உத்தரவின்படி, ஹேம்பர்கர் (Hamburger), ஐஸ்கிரீம் (Icecream), மற்றும் கரோக்கி (Karaoke) போன்ற சொற்களை பயன்படுத்தக்கூடாது. இந்த சொற்களுக்கு பதிலாக, வடகொரிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களிலும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
 
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கு வடகொரிய இளைஞர்கள் மத்தியில் பரவாமல் தடுப்பதாகும். வடகொரியா ஏற்கனவே தனது தனித்துவமான கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய தடை, மேற்கத்திய நாடுகளின் மொழி மற்றும் வாழ்க்கை முறை வடகொரிய சமூகத்தில் ஊடுருவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது

webdunia

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments