
பொதுவாக பிறந்த குழுந்தையின் எடை சுமார் 7.5 பவுண்டு (3.4 கிலோகிராம்) இருக்கும்....
அமெரிக்காவின் நாஷ்வில் (Nashville) நகரில் ஓர் இன்ப அதிர்ச்சி...
TriStar Centennial மகளிர் மருத்துவமனையில் பிறந்திருப்பது சுமார் 13 பவுண்ட் (சுமார் 6 கிலோ) எடைகொண்ட குழந்தை - கேசியன் (Cassian).
கடந்த மூவாண்டில் அங்குப் பிறந்த குழந்தைகளில் இதுவே ஆகப்பெரிய குழந்தை என The Independent குறிப்பிட்டது.
குழந்தையைப் பெற்ற ஷெல்பி மார்த்தின் (Shelby Martin) அது குறித்து இம்மாதம் (அக்டோபர் 2025) 1ஆம் தேதி TikTokஇல் பதிவிட்டிருந்தார்.
"கேசியன் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்," என்றார் அவர்.
தம்மை மருத்துவமனையில் பார்த்துக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஷெல்பி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பதிவைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான இணையவாசிகள் பலர் தாயும் சேயும் செழித்து இருக்க வாழ்த்துத் தெரிவித்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments