Ticker

6/recent/ticker-posts

வாழ்க்கை ஒரு வசந்தம்!


புரிந்துணவில் கலந்திட 
இல்லற பந்தம் நல்லறமாய் 
உள்ளுணர்வோடு இணைந்தே
அமைதியாகவே நகர்ந்திடும். 

தொட்டுச் செல்லாமல் 
வெட்டி  விலகாமல் 
கட்டொழுங்கோடு விட்டுக் கொடுத்து 
தீர்க்கமாய்ப் பேசித் தீர முடிவு எடுத்து 
வாழ்வோரின் வாழ்வு வசந்தமாகிடும்.

ஒழிவு மறைவுகள் இன்றி வரவு 
செலவைக் கணித்து .
ஊதியத்திற்குள் அடங்கிய 
வாழ்வை வாழ்ந்திட வேண்டும்
என முயன்றிடும் தம்பதியர் 
இடையே நிம்மதி நிலைத்திடும்.

மாது சூது மது தொட்டிடாத 
கணவனும் பகட்டு நாகரிகம் 
பேராசை புகழ்ச்சி  இவைகளுக்கு 
அடிமையாகத மனைவியும்  
ஒன்றென அமைந்து  விட்டால் 
காலம் கடந்தும் அமைதியோடு 
பயணமாகிடும் திருமண பந்தம்.

காமங்களைக் கடந்த காதலும் 
மோகங்களை மறைமுகமாய்ப் பகிர்ந்து 
பாசத்தையும் நேசத்தையும் 
உணர்த்தி வேற்று வயிற்றுப் பிள்ளை 
என்று பேதம் பாராமல் பரிவோடு 
வாழும் கணவன் மனைவி 
இடையே நம்பிக்கை வலுவாகிடும்.

உயிர்த்துடிப்பு உள்ளத் தவிப்பு 
இணையாரிடையே இருப்பு 
நோய் நொடியில் 
தாரத்துக்குத் தாயாகிடும் 
மணாளன் அமைவது 
வரம் அமைந்து விட்டால் 
நலமான வாழ்வுக்கு ஏற்ற சுயம்வரம். 

துன்பங்களின் போது ஒத்தனமாகி 
தோள் சாய்த்திடும் தோழர்களாகி 
வலிக்கும் வேதனைக்கும் மருந்தாகி
இருப்போரின் குடும்பம் ஓர் கதம்பம்.

நாளெல்லாம் சேவை புரிவது 
மனைவியானாலும் நலக்குறைவின் 
போது புருசனோட ஒத்துழைப்பு 
பெரும் பங்களிப்பு அதுவே 
மனைவியோட எதிர் பார்ப்பாகிடும்.

அதனைப் புரிந்து நடந்திடும் 
தலைவனே முழுமையாக 
மனைவியை நேசித்திடும் 
உள்ளம் அங்கே தேங்கி 
இருக்கும் அன்பு வெள்ளம்.

இவர்களுக்கு நிகர் எவரும் 
இல்லை இச்சைகளைத் தள்ளி விட்டு
ஆத்மாவோடு பேசிடும் 
உன்னத உறவாகப் பலப்படும்.

கூடலும் ஊடலும் பாதி பாதியே
கூடிய வாழ்கையிலே அனைத்தும் 
நுழைந்திடுமே கெட்டவைக்குக்
கதவை அடைத்து கிடைக்கப் 
பெற்ற சந்தோசத்தை மட்டுமே
நெஞ்சத்தில் நிறுத்தி சிந்தித்தால் 
வெறுப்பு விலகி விருப்பு வளர்ந்திடும்.

எதிர் வீட்டுத் தம்பதியர் போன்றே
நாமும் பாடை ஏறும் வரை மரணம்
அழைத்திடும் நாளிகையிலும் 
பிடியான தடியாய் ஒருவருக்கு
ஒருவரென வாழ்ந்திடுவோமே.

ஆர் எஸ் கலா

 


Post a Comment

0 Comments