
ஹாங்காங்கில் பிள்ளைகளுக்கு 14 வயதாகும்வரை திறன்பேசிகளைக் கொடுக்க வேண்டாம் என்கிறது Look Up Hong Kong அமைப்பு.
பிள்ளைகளுக்கு 16 வயதாகும்வரை அவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அது கூறியுள்ளது.
ஏற்கனவே 6 முதல் 10 வயது வரையுள்ள பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் திறன்பேசி வைத்திருப்பதாக அது நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் அதிக நேரம் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக SCMP செய்தி நிறுவனம் சொன்னது.
திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் உடல்ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 67 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பெற்றோரும் தாங்கள் திறன்பேசியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தச் சிரமப்படுவதாக ஆய்வு குறிப்பிட்டது.
தொடக்கநிலை அல்லது உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளையுடைய 651 பெற்றோர் ஆய்வில் கலந்துகொண்டனர். இதனை அரசு உத்தரவிட்டால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கோரினர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments