
ஜெர்மனியின் மியூனிக் (Munich) விமான நிலையம் நேற்று (3 அக்டோபர்) இரண்டாவது முறையாக மூடப்பட்டது.
விமான நிலையத்துக்கு அருகே ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமான நிலையத்துக்கு வரவிருந்த 23 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும் 12 விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டன.
விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 46 விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
மொத்தம் 6,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினமும் (2 அக்டோபர்) விமான நிலையத்துக்கு அருகே
ஆளில்லா வானூர்திகள் தென்பட்டன.
விமான நிலையம் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.
30க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஜெர்மனியில் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆளில்லா வானூர்திகளை சுட்டு வீழ்த்த ராணுவ அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் அனுமதியில்லை.
அவர்களுக்கு விரைவில் அதிகாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய ஆளில்லா வானூர்திகள் டென்மார்க், நார்வே, போலந்து ஆகிய நாடுகளிலும் அண்மையில் தென்பட்டுள்ளன.
ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் ரஷ்யா குற்றச்சாட்டை மறுத்துவிட்டது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments