Ticker

6/recent/ticker-posts

2026ல் பூமிக்கு வரும் ஏலியன்கள்? பாபா வாங்காவின் மிரள வைக்கும் கணிப்புகள்!


2026 குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து,

பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சில சம்பவங்கள் நடைபெறும் என இவர் ஏற்கனவே கணித்து வைத்துள்ளார்.

அதில் பூகம்பங்கள், வன்முறை எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை பிரச்சனைகள் ஆகியவை கிரகத்தின் நிலப்பரப்பில் 7–8% ஐ பாதிக்கும். 2026 பூமிக்கு மற்றொரு கொந்தளிப்பான ஆண்டாக இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். 26 நவம்பரில் வேற்று கிரக வாழ்க்கையுடனான முதல் தொடர்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.    

ibctamilnadu

 


Post a Comment

0 Comments