
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்து அசத்தியது. அந்த வெற்றிக்கு முகமது சிராஜ் பந்து வீச்சு துறையில் 23 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கடைசி போட்டியின் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற உதவினார்.
முன்னதாக அத்தொடரில் இரு அணிகளை சேர்ந்த எந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளில் விளையாடிய சிராஜ் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக கடைசி பந்தைக் கூட அவர் முழு மூச்சுடன் 140+ கி.மீ வேகத்தில் வீசியதை இங்கிலாந்து பிரண்டன் மெக்கல்லம் வெளிப்படையாக பாராட்டினார்.
இந்நிலையில் அத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாட மாட்டார் என்ற உத்வேகமும் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற லட்சியம் தான் தம்மை 5 போட்டிகளில் விளையாட வைத்ததாக சிராஜ் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் 6வது போட்டியில் விளையாடுவதற்கும் தாம் தயாராக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இங்கிலாந்தில் காலடி வைத்ததும் நாம் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் பவுலராக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கினேன். அத்தொடர் முழுவதுமே மனதளவில் வலுவாக இருந்த நான் 100% ஃபிட்டாக அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராக இருந்தேன். பயிற்சிப் போட்டிகளில் விளையாடியதும் என்னுடைய ரிதமும் நன்றாக மாறியது”
“ஜஸி பாய் 5 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பது தெரிந்ததும் இந்திய அணியின் 2வது சீனியர் பவுலராக நான் என்னுடைய 100% பங்களிப்பைக் கொடுக்க விரும்பினேன். கடைசிப் போட்டிக்கு முன் உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது? என்று கேப்டன் கில் கேட்டார். அவரிடம் “முதல் தரமாக இருக்கிறது” என்று சொன்னேன். அப்போது உங்களால் 5வது போட்டியில் விளையாட முடியுமா? என்று அவர் கேட்டார்”
“நீங்களும் பும்ராவை போல இந்தியாவின் முதன்மை பவுலர் என்பதால் அதை நீங்களே முடிவெடுங்கள் என்று கில் என்னிடம் சொன்னானர். அவரிடம் நான் 100% அனைத்தையும் கொடுத்து இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அத்தொடரில் 6வது போட்டி நடைபெற்றிருந்தால் கூட அதில் நான் விளையாடியிருப்பேன். ஏனெனில் அதிகம் சோர்வடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments