
உள்ளூர் சொத்துக்கள் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை ஒரு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(20.10.2025) திறக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாடு 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களைப் பெற்றிருந்தாலும், கிடைக்கக்கூடிய சொத்துக்களின் அளவு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது.
குற்றப் புலனாய்வுச் சட்டத்தை செயல்படுத்துவது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments