மாரடைப்புக்கு ஆளான தனது உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய பூனை

மாரடைப்புக்கு ஆளான தனது உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய பூனை


42 வயதான சாம் ஃபெல்ஸ்டெட் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 4.30 மணியளவில் அவரது ஏழு வயது பூனை பில்லி  அவளை எழுப்ப தனது பாதங்களை மார்பில் அடித்து  எழுப்பியது.

ஆனாலும் அவளால் தன் உடலை அசைக்க முடியாமல் இருப்பதையும், வலது பக்கம் கடும் வலி இருப்பதையும் உணர்ந்தாள், 
அதனால் அவள் அம்மா கரேனை உதவிக்கு அழைத்தாள்.

நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் வரவேற்பாளரான சாம், ஆகஸ்ட் 8 அதிகாலையில் கரேன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாமை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள், 

சாம் கூறும் போது: 
“நான் சற்று அதிர்ச்சியடைந்தேன், நான் படுக்கைக்குச் செல்லும்போது , நான் நன்றாகத்தான் இருந்தேன்.
 எனக்கு எந்தவித நோயும் இருக்கவில்லை. எந்த வலியும் இல்லை.

திடீரென நான் அதிகாலையில் வியர்வையில் மூழ்கி எழுந்தேன், நகர முடியவில்லை."பில்லி என் மார்பில் இருந்தது. என் காது துளையில் சத்தமாக மியாவ் மியாவ் என்று கத்திக்கொண்டிருந்தது.

பில்லி ஒரு நாளும் அப்படி சத்தமாக மியாவ் சொன்னதில்லை.எனினும் எனக்கு அசைய முடியாமல் இருக்க அம்மா கரேனை கஷ்டப்பட்டு அழைத்தேன்.

அம்மா உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பரிசோதித்த மருத்துவர்கள் எனக்கு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள், 

"என்னுடைய பூனை எப்பொழுதும் தூங்கிக்கொண்டேதான் இருக்கும். மற்ற பூனைகளைப்போன்று யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை.தனிமையை மட்டுமே விரும்பும் பூனை இது.ஆனால் அன்று பில்லியின் விரைவான செயல்கள்தான் என்னுடைய உயிரைக் காப்பாற்றியுள்ளது" என்று சாம் நம்புகிறார்.



Post a Comment

Previous Post Next Post