Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-9


குறள் மொழி 15

இரவு அச்சம்

15.இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

குறள் எண் : 1064

குறள் மொழியின் பொருள்

வறுமை வந்துற்ற நிலையில், தன் தேவைக்குப் பிறரிடம் கையேந்தாதப் பண்பு ஆனது, இவ்வுலகையே கொடுத்தாலும் ஈடாகாச் சிறப்பு உடையது.

நபிமொழி :

வறுமை வந்துற்ற போது, தன், தேவைக்காக மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து அதற்கு மாறு செய்கின்றான். ஆதலின், வறுமையால் கடன்படுவதிலிருந்து அதிகம் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் ஆதாரம் - புகாரி 2397

(தொடரும்)

 


Post a Comment

0 Comments