
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பல ரசிகர்களிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் 11 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது.
2024 டி20 உலகக் கோப்பையை அவர் தலைமையில் வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டது. அதனால் 2027 உலகக் கோப்பை வரை ரோஹித் கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்ற சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை கட்டமைக்கத் துவங்கியுள்ளது.
அதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் வட்டமான வாழ்க்கையில் இந்திய அணியின் கேப்டன்கள் யாருமே நிலையானவர்கள் கிடையாது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். எனவே ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த முடிவு பற்றி சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ் காணப்படுகிறது. என்னைப் பொறுத்த வரை இந்த முடிவுக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது என்று கருதுகிறேன். இது பிசிசிஐ, பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோர் எடுத்த முடிவு. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட்ட கில் ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டனாகவும் இருக்கிறார்”
“எனவே அவரிடம் அனுபவம் இருக்கிறது. வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்க வேண்டும். அந்த பொறுப்புக்கு சுப்மன் கில்லை பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே நாம் அதை ஏற்றுக்கொள்ள. கேப்டன்ஷிப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது. ஏனெனில் அது நம்முடைய கைகளில் இல்லை”
“இன்று ஒருவர் கேப்டனாக இருப்பார். நாளை மற்றொருவர் கேப்டனாக இருப்பார். இந்த வட்டம் தொடர்ந்து கொண்டே செல்லும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சூரியகுமாருக்கு பின் டி20 அணியில் கேப்டனாகவும் இல் நியமிக்கப்பட உள்ளார். அதற்காகவே தற்போது அவர் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments