
வெந்தயம் வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல, நம் உடல் நலனுக்குப் பல வழிகளில் உதவும் அற்புதத் தானியம். குறிப்பாக, உடலைக் குளிர்விக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவுப்பொருளாகும். ஆனால் வெந்தயத்தை ஊறவைக்க வேண்டுமா அல்லது முளைகட்டி சாப்பிட வேண்டுமா? எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவுமா அல்லது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் நமக்கு உள்ளது. இதுகுறித்து இரைப்பை குடல் மருத்துவர் சௌரப் சேத்தி தன்னுடைய ஒரு பேட்டியில் கூறியவை இங்கே:
“வெந்தயம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும். ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்கவும் உதவும். வெந்தயத்தில் உள்ள ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவும் சேர்மங்கள், உடனடி மாற்றங்களைத் தராவிட்டாலும், நிச்சயம் வெந்தயம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
பெண்களைப் பொறுத்தவரை, பொதுவாகவே வெந்தயம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த உதவும், இதன்மூலமாக PCOS-ஐ நிர்வகிப்பதில் அது முக்கிய பங்காற்றுகிறது. இது மனநிலை மாற்றங்கள் போன்ற மெனோபாஸ் கால அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் புதிய தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
இவையன்றி, நீரிழிவு அளவைக் கட்டுப்படுத்தவும் வெந்தயம் உதவும். வெந்தயம் HbA1C ஐக் குறைத்து இன்சுலின் அளவை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது சில நவீன நீரிழிவு மருந்துகளைப் போலவே ரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்தும் குடல் ஹார்மோனான GLP-1 ஐயும் அதிகரிக்கிறது. இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து மறுதினம் எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது. அதேநேரம், கல்லீரலுக்கு வெந்தயம் எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. எடை இழப்பு முயற்சிக்கு உதவும். இவைபோக பசியையும் அடக்கும்” என்றார்.
தானேவில் உள்ள KIMS மருத்துவமனைகளின் தலைமை உணவியல் நிபுணர் டி.டி. அம்ரீன் இதுகுறித்து பேசுகையில், வெந்தயம் எப்படி எடை இழப்பு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பது பற்றி பகிர்ந்துகொண்டார். அதன்படி, “வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளன என்பதால், அவை வயிற்றில் ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. அது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால்தான் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் இயற்கையாகவே கலோரி உட்கொள்ளலைக் குறைக்க முடியும். இப்படியாக இது சீரான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு வெந்தயம் உதவுகிறது. இருப்பினும் விரைவான தீர்வுகளை தராது" என்றார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments