
சவுதி அரேபியாவில் 11 மில்லியன் டன் தங்கம், வெள்ளி வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் முன்னணி சுரங்க நிறுவனமான Almasane Alkobra Mining Company (AMAK), நஜ்ரான் பகுதியில் உள்ள தனது ஆய்வு உரிமப் பகுதியில் சுமார் 11 மில்லியன் டன் பொருளாதார மதிப்புள்ள கனிம வளங்களை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் தங்கம், செம்பு, சிங்க் மற்றும் வெள்ளி போன்ற முக்கிய கனிமங்கள் அடங்குகின்றன.
ஆய்வு நடவடிக்கைகள்
AMAK, 2024 செப்டம்பரில் உரிமம் பெற்றதும் உடனடியாக ஆய்வுகளைத் தொடங்கியது. 2025 பிப்ரவரி மாதம் முதல் 27,000 மீட்டர் தூரம் வரை தீவிர சுரங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை உரிமம் பெற்றுள்ள பகுதியின் 10 சதவீதம் மட்டுமே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், வளங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
CEO கருத்து
AMAK நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி மேக்டொனால்ட்-டே, “இது எங்கள் நீண்டகால முதலீட்டு திட்டத்துடன் ஒத்துப்போகிறது. வளங்கள் 20 மில்லியன் டன் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது எங்கள் தொழிற்சாலைகள் விரிவாக்கத்திற்கும், உற்பத்தி அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும்” என கூறியுள்ளார்.
AMAK புதிதாக நஜ்ரான் பகுதியில் உள்ள கடினா தளத்திற்கு 10 ஆண்டு சுரங்க உரிமம் பெற்றுள்ளது. 9.84 சதுர கி.மீ. பரப்பளவில் தங்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2026 முழுவதும் கூடுதல் புவியியல் ஆய்வுகள், சுரங்க பணிகள் நடைபெறும். JORC தரநிலைக்கு ஏற்ப வள அறிக்கை 2026 இரண்டாம் பாதியில் வெளியிடப்படும்.
Vision 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா சுரங்கத் துறையை வலுப்படுத்தி வருகிறது. AMAK-ன் இந்த கண்டுபிடிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும்.
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments