Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-15


குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

தந்தை உழைத்துக் குழந்தைகள் ஆற்றலுடன் முன்னேற வைத்தல் கடன்.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரை விஞ்சும் அறிவார்ந்த பிள்ளைகள் இத்தரணிக் கெல்லாம் பயன்.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன்பிள்ளை போற்றப் படும்போது பெற்றெடுத்த இன்பத்தை விஞ்சும் மகிழ்வு.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்.

இவன்போல் மகன்பெற என்னதவம் செய்தார்? வியக்கவைத்தல் மைந்தன் கடன்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments