Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-16


8.அன்புடைமை

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்.

அன்புகொண்டோர் வாடும் துயர்கண்டால் கண்ணீரோ தன்னால் பெருக்கெடுக்கும் சாற்று.

குறன் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பற்றோர் எல்லாம் தனக்கென்பார்!
அன்புள்ளோர் இன்னுயிரும் ஈவார் பிறர்க்கு.

குறள் 73:

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.

இன்னுயிரும் இவ்வுடலும் சேர்ந்தே இருப்பதுபோல் அன்புதான் வாழவின் உயிர்.

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பே விருப்பத்தைத் தந்தே பழகவைக்கும்! நட்பாக மாறவைக்கும் சாற்று.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments